ads

ரொமான்டிக் படத்தில் ஜோடியாக இணைந்துள்ள பிக்பாஸ் மகத் ஐஸ்வர்யா

ரொமான்டிக் படத்தில் ஜோடியாக இணைந்துள்ள பிக்பாஸ் மகத் ஐஸ்வர்யா

ரொமான்டிக் படத்தில் ஜோடியாக இணைந்துள்ள பிக்பாஸ் மகத் ஐஸ்வர்யா

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் மகத் மற்றும் ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் இணைந்து காதல் கலந்த ரொமான்டிக் படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தினை பிரபு ராம் சி என்பவர் இயக்க உள்ளார். இவர் முன்னதாக ஹாலிவுட் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

பிக்பாஸ் ஹவுசில் இருக்கும் போதே ஐஸ்வர்யா, சிம்புவின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாக வதந்திகள் பரவி வந்தது. இவர் ஏற்கனவே தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களின் ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோரது நடிப்பில் வெளியான 'பியார் பிரேமா காதல்' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது அடுத்த பிக்பாஸ் ஜோடி தயாராகி விட்டது. பிக்பாஸ் மகத் மற்றும் ஐஸ்வர்யா முதன் முறையாக இணைந்து நடிக்க உள்ள இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

ரொமான்டிக் படத்தில் ஜோடியாக இணைந்துள்ள பிக்பாஸ் மகத் ஐஸ்வர்யா