ads

சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க உள்ள ஆங்க்ரி ஐஸ்வர்யா

பிக்பாஸ் வீட்டில் மிகவும் பிரபலமான ஐஸ்வர்யா சிம்புவின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் மிகவும் பிரபலமான ஐஸ்வர்யா சிம்புவின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக பைனலை நெருங்கியுள்ளது. இறுதி வாரமான இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த சீசன் 1 மற்றும் சீசன் 2 ஹவுஸ் மெட்ஸ் அனைவருமே சீசன் 2 பைனலிஸ்ட் போட்டியாளர்களை வாழ்த்தி சென்றுள்ளனர். 103வது நிகழ்ச்சியான நேற்று மகத்தும், சென்றாயனும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து பழைய நினைவுகளை பகிர்ந்து சென்றனர். இதில் சென்ட்ராயன் வந்தவுடனே உணர்ச்சி வசப்பட்டு பாத்ரூமிற்கு சென்று அவர் வேலையை பார்க்க சென்று விட்டார்.

பின்பு ஹவுஸ் மேட்ஸை குஷி படுத்தும் விதமாக உங்களுக்கெல்லாம் பெரிய எதிர்காலம் காத்து கொண்டிருக்கிறது என்று வாழ்த்தி சென்றார். இதில் ஐஸ்வர்யாவிடம் சிம்பு எதை சொல்லக்கூடாது என்று சொன்னாரோ அதை அவரிடமே உளறினார். சிம்புவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் ஐஸ்வர்யாவை நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் ஐஸ்வர்யாவிற்கு ஒரே கொண்டாட்டம் தான்.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்து சென்ற பிறகு சென்ட்ராயன், மகத், ஷாருக் மற்றும் யாஷிகா ஆகியோருக்கு புதியதாக பட வாய்ப்புகள் வந்துள்ளன. இவர்களை போன்றே ஐஸ்வர்யாவும் உள்ளே இருக்கும் போதே சில படங்களில் நாயகியாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்து வருகின்றனர். இதனால் சிம்புவும் தன்னுடைய அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ஐஸ்வர்யாவிற்கு வாய்ப்பளித்துள்ளார்.

சிம்பு தற்போது 'செக்க சிவந்த வானம்' படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வருகிறார். அநேகமாக சுந்தர் சி படத்திலே நாயகியாக நடிக்க வாய்ப்பு இருக்கிறது. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யாவின் தமிழை கேட்டு பிக்பாஸ் ரசிகர்களில் பாதிபேர் தமிழையே மறந்து விட்டனர். இதனாலே அவருக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க உள்ள ஆங்க்ரி ஐஸ்வர்யா