ads

அடங்க மறுக்கும் நீலாம்பரி - எங்களுக்கும் நேரம் வரும் என காத்திருக்கும் போட்டியாளர்கள்

என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில் ஒரு மனுஷன் என்ற மரியாதை கூட கிடைக்கல புலம்பும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.

என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில் ஒரு மனுஷன் என்ற மரியாதை கூட கிடைக்கல புலம்பும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.

பிக்பாஸின் 45வது நிகழ்ச்சி பிக்பாஸ் எதிர்பார்த்தபடி சண்டையும், கலவரமாக சென்றது. ஐஸ்வர்யாவின் கொடுங்கோல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் போட்டியாளர்கள் பொது மக்களாக சித்திரவதையை அனுபவித்து வருகின்றனர். முன்னதாக ஐஸ்வர்யாவிடம் பாலாஜி சிக்கி தவித்த நிலையில் நேற்று சென்றாயன் மாட்டி கொண்டு கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஐஸ்வர்யாவை அடிக்க கை ஓங்கினார்.

ஆனால் ராணியை எதிர்த்து பேசியதால் அவர் மீது முட்டை தண்ணீயை ஊற்றி நாறடித்து விட்டார். இந்த ஆட்சி எப்போது முடியும், ஐஸ்வர்யாவை யார் அடிப்பாங்க என்று ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் போட்டியாளர்களிடையே சண்டையை அதிகப்படுத்த பிக்பாஸ் வித்தியாசமான டாஸ்குகளை கொடுத்து வருகிறது.

பிக்பாஸ் ஆலோசனைக்கேற்ப ஐஸ்வர்யாவும் அடங்க மறுத்து நீலாம்பரியாக சுற்றி திரிகிறார். தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் கடந்த நான்கு நாட்களாக ஒரே அறையில் அடைத்து வைத்திருந்த வைஷ்ணவி பிக்பாஸ் வீட்டிற்குள் மறுபடியும் சேர்க்கப்பட்டுள்ளார். வரும்போது அடுத்த டாஸ்க்குடன் வந்துள்ளார். அடுத்து என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பாப்போம்.

அடங்க மறுக்கும் நீலாம்பரி - எங்களுக்கும் நேரம் வரும் என காத்திருக்கும் போட்டியாளர்கள்