ads

லேடி ஹிட்லரை பாத்திருக்கீங்களா - சரியுமா ராணி ஐஸ்வர்யாவின் சாம்ராஜ்யம்

ஏற்கனவே சந்திரமுகியாக இருந்த ஐஸ்வர்யாவை லேடி ஹிட்லராக பிக்பாஸ் ராணி பதவி கொடுத்து மாற்றியுள்ளது.

ஏற்கனவே சந்திரமுகியாக இருந்த ஐஸ்வர்யாவை லேடி ஹிட்லராக பிக்பாஸ் ராணி பதவி கொடுத்து மாற்றியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 2வின் 45வது நாள் ரசிகர்கள் எதிர்பார்த்தைதை விட சுவாரஸ்யமாக இருந்தது. ப்ரோமோவை காட்டி எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய பிக்பாஸ் ரசிகர்களுக்கு நேற்றைய நிகழ்வு ட்வீஸ்ட்டாக இருந்தது. ஏற்கனவே தலைவர் என்ற பெயரில் ஆணவத்துடன் சுற்றி திரிந்த ஐஸ்வர்யாவுக்கு தற்போது ராணி பதவி கிடைத்துள்ளது. தலைவராக இருந்த போது இருந்த போதே சந்திரமுகியாக மாறிய ஐஸ்வர்யாவை ராணி பதவி கொடுத்து லேடி ஹிட்லராக பிக்பாஸ் மாற்றிவிட்டது.

மன்னர் காலத்து ஆட்சியை போன்று அடக்கு முறையில் போட்டியாளர்களும், ஆலோசகர் மற்றும் பாதுகாவலர் பதவியில் டேனியும், ஜனனியும் நியமிக்கப்பட்டுள்ளனர். ராணிக்கு தனி அறையை ஒதுக்கி, பாலாஜியும் இதர போட்டியாளர்களும் ராணியை கலாய்க்கும் விடியோவை போட்டி காட்டி சும்மா இருந்த சந்திரமுகியையும் பிக்பாஸ் கிளப்பி விட்டுள்ளது. தன்னை கலாய்த்தவர்களை சகித்து கொள்ள முடியாத ராணி, பாலாஜி மீது குப்பையை கொட்டி அசிங்க படுத்திவிட்டார். ஷாரிக், ரித்விகா ஆகியோரது சாமான்கள் அனைத்தையும் நீச்சல் குளத்தில் கொட்டி விட்டனர்.

முன்பு பாலாஜியை மட்டும் வச்சி செய்ய இருந்த ஐஸ்வர்யா, ஒவ்வொருத்தரையுமே நல்லா வச்சி செய்து வருகிறார். இதனால் நாளைக்கு பாலாஜியின் நிலைமையும், இதர போட்டியாளர்கள் நிலைமையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் தற்போது இன்று நடக்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஐஸ்வர்யா செய்யும் சில்ர தனமான காரியங்களை சகித்து கொள்ள முடியாக சென்றாயன் அவரை அடிக்க சென்று விட்டார். பிக்பாஸ் எதிர்பார்த்தபடி போட்டியாளர்களிடையே மோதல் அதிகமாகிவிட்டது. இனி என்ன நடக்குமோ?..

லேடி ஹிட்லரை பாத்திருக்கீங்களா - சரியுமா ராணி ஐஸ்வர்யாவின் சாம்ராஜ்யம்