ads

கோபி நயினார் இயக்கத்தில் ஜெய்யுடன் கைகோர்க்கும் பிக்பாஸ் டேனியல்

அறம் இயக்குனர் கோபி நாயனாரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த படத்தில் காமெடி நடிகராக டேனியல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அறம் இயக்குனர் கோபி நாயனாரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த படத்தில் காமெடி நடிகராக டேனியல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அறம் படத்திற்கு பிறகு இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் 'அறம் 2' படம் பலத்த எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு பிறகு கோபி நயினார் நடிகர் ஜெயுடன் இணைந்துள்ளார். இந்த படமும் சமூக அக்கறை கொண்டதாக உருவாக உள்ளது. இதற்கான தகவல் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பினை நடிகர் மற்றும் பிக்பாஸ் பிரபலமான டேனியல் வெளியிட்டுள்ளார்.

இவருடைய டிவிட்டரில் "என்னுடைய அடுத்த படத்திற்காக மறுபடியும் ஜெயுடன் இணைத்துள்ளேன். இந்த படத்தை அறம் இயக்குனர் கோபி நயினார் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளது." என்று அவர் தெரிவித்துள்ளார். இவர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு 11வாரத்தில் வெளியேறினார்.

வெளியேறிய அடுத்த நாளே தனது காதலியான டெனிஷாவை திருமணம் செய்துள்ளார். இதன் பிறகு தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக களமிறங்கியுள்ளார். ஜெய் நாயகனாக நடிக்க உள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பினை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது.

கோபி நயினார் இயக்கத்தில் ஜெய்யுடன் கைகோர்க்கும் பிக்பாஸ் டேனியல்