பிக் பாஸ் பிரபலங்கள் ஜோடி சேர இருப்பவர் யாருனு தெரியுமா !

       பதிவு : Oct 31, 2017 14:35 IST    
பிக் பாஸ் பிரபலங்கள் ஜோடி சேர இருப்பவர் யாருனு தெரியுமா !

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பிரமாண்டமாக சில மாதங்களுக்கு முன்பு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரின் மனதையும் கவர்ந்த நிகழ்ச்சியாக இருந்தது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலர் திரை படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக கமிட்டாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஆரவ், ஓவியா, ஹரிஷ், பிந்து போன்றவர்களுக்கு படங்களில் வாய்ப்புகள் அதிகளவு வந்துகொண்டிருக்கிறது.

 

இயக்குனர் இலன் இயக்கயிருக்கும் படத்தில் பிக் பாஸ் ஹரிஷ் மற்றும் ரைசா காமெடி கலந்த காதல் திரைப்படத்தில் நடிப்பதற்கு இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.  

'நீங்க செட்டப் பண்ணுங்க' பாடலுக்கு அதிகளவு வரவேற்புகள் ரசிகர்களுக்கிடையில் இருந்தது. இந்த பாடலை போன்று ரைசா சொல்லும் 'போங்கய்யா' வார்த்தையை வைத்து ஏதாவது பாடலை உருவாக்க வாய்ப்புகள் இருக்கிறதா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.   

 

மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் 5-ல் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ஹரிஷ் கல்யாண் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 


பிக் பாஸ் பிரபலங்கள் ஜோடி சேர இருப்பவர் யாருனு தெரியுமா !


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்