பிக்பாஸ் சீசன் 2வில் முதலில் வெளியேற உள்ள போட்டியாளர்கள்

       பதிவு : Jun 20, 2018 10:34 IST    
பிக்பாஸ் சீசன் 2 மூன்றாவது நாளை கடந்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 2 மூன்றாவது நாளை கடந்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 2 தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆரம்பித்த மூன்றாவது நாளிலே லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் ஒரே வீட்டில் அவர்களை அடைத்து 60 கேமிராக்களை கொண்டு கண்காணித்து வருகின்றனர். தற்போது அனைவரும் நன்றாக பேசி வரும் நிலையில் டாஸ்க் என்ற பெயரில் ஒவ்வொருவரையும் சீண்டி விட்டு அவர்களின் குணாதிசியங்களை மக்களுக்கு தெரிய வைக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் 60 வயதை கடந்த ஆனந்த் வைத்யநாதனை ஏன் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. இதனால் தற்போது இவர்தான் முதலில் வெளியேற்ற படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல் ஹாசன் முதல் வாரத்தில் யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார். ஆனாலும் முதலில் யார் வெளியேறுவார்கள் என்ற ஆர்வம் போட்டியாளர்களிடமும், ரசிகர்களிடமும் அதிகமாகவே உள்ளது.

 

ஆனந்த் வைத்யநாதனுக்கு பிறகு மெட்ராஸ் படத்தின் பிரபலமான ரித்விகா வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. சக போட்டியாளர்களுடன் சரிவர பேசாமல் இருப்பதால் அவர் ஆனந்த் வைத்யநாதனுக்கு முன்னதாகவே வெளியேற்ற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் என்ன வென்றால் பங்கு பெற்ற 16 போட்டியாளர்களில் இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகியான யாஷிகா ஆனந்த் தான் மிகவும் குறைவான வயதில் உள்ளார். 


பிக்பாஸ் சீசன் 2வில் முதலில் வெளியேற உள்ள போட்டியாளர்கள்


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்