ads

பிக்பாஸ் 2 ஹவுஸ் மேட்ஸை வெரட்டி வெரட்டி வெளுத்த பிக்பாஸ் 1 ஹவுஸ் மெட்ஸ்

பிக்பாஸில் இன்று சீசன் 1க்கும் 2க்கும் இடையே நடன போட்டி நடக்க போகிறது. இந்த கொடுமைகளை பார்க்க வேண்டுமா பிக்பாஸ்.

பிக்பாஸில் இன்று சீசன் 1க்கும் 2க்கும் இடையே நடன போட்டி நடக்க போகிறது. இந்த கொடுமைகளை பார்க்க வேண்டுமா பிக்பாஸ்.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் 89வது நாள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. பைனலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் கடந்த நாட்களாக பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் சீசன் 2 போட்டியாளர்களை பைனலுக்கு தயார் படுத்தி வருகின்றனர். இந்த நாட்களில் முதல் சீசனுக்கும் இரண்டாவது சீசனுக்கும் உள்ள வித்தியாசத்தை ரசிகர்கள் உணர்ந்துள்ளனர். முதல் சீசனில் கொடுக்கப்பட்ட கஷ்டமான டாஸ்க் எதுவுமே இரண்டாவது சீசனில் கொடுக்கவில்லை. ஆனால் இந்த டாஸ்கிற்கே பிக்பாஸ் வீடு, முதல் சீசனை விட இரண்டாவது சீசனில் போர்க்களமாக காணப்பட்டது.

நேற்று பைனல் வாரத்திற்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இருந்து பாலாஜி, மும்தாஜ், விஜயலட்சுமி, ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். மீதமுள்ள ஜனனி மற்றும் யாஷிகா ஆகியோரில் யார் பைனல் வாரத்திற்கு செல்ல போகிறார்கள் என்பது இன்று தெரிந்துவிடும். இன்று பிக்பாஸின் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோவில் யாஷிகா பேச்சு மூச்சு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். அவரை ஹவுஸ் மெட்ஸ் தூக்கி கொண்டு முதலுதவிக்காக கண்பசன் ரூமிற்கு செல்கின்றனர். இன்று நடக்கவுள்ள போட்டியில் யாஷிகா வெற்றி பெற்று பைனல் வாரத்திற்கு தேர்வாகியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் அவரின் நிலைமை என்ன ஆயிற்று என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில் அடுத்த ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோவில் சீசன் 1 மற்றும் 2 விற்கும் இடையே நடன போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்த நடன போட்டியில் சீசன் 1இல் சோலோவாக விளையாடி வரும் பாலாஜி ஹீரோவாகவும், மீதமுள்ள பெண் போட்டியாளர்கள் அவருடன் இணைந்து ஆடுகின்றனர். இதை நினைத்து ரசிகர்கள் புலம்பி தள்ளுகின்றனர். சீசன் 1 ஹவுஸ் மெட்ஸ் சொடக்கு மேல சொடக்கு மேல பாடலுக்கு நடனம் ஆடி சீசன் 1 ஹவுஸ் மேட்ஸை வெரட்டி வெரட்டி வெளுக்கின்றனர். இது தவிர இந்த வார ஏவிக்சனுக்கு ரித்விகா, ஐஸ்வர்யா, மும்தாஜ் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இதில் கடந்த வாரம் காப்பாற்ற பட்ட ஐஸ்வர்யா தப்பிப்பாரா என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

பிக்பாஸ் 2 ஹவுஸ் மேட்ஸை வெரட்டி வெரட்டி வெளுத்த பிக்பாஸ் 1 ஹவுஸ் மெட்ஸ்