ads

பெத்தவங்க பாசத்துடன் ப்ரீஸ் டாஸ்க் வைத்து விளையாடும் பிக்பாஸ்

72 நாட்களாக நடந்த கலவரங்களில் தன்னை மறந்து குடும்பத்தை மறந்த போட்டியாளர்களை குடும்ப பாசத்திற்காக ஏங்க வைத்துவிட்டது.

72 நாட்களாக நடந்த கலவரங்களில் தன்னை மறந்து குடும்பத்தை மறந்த போட்டியாளர்களை குடும்ப பாசத்திற்காக ஏங்க வைத்துவிட்டது.

தற்போது 71 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ், கலவரங்கள், கருத்து வேறுபாடு இதையெல்லாம் தாண்டி பாச போராட்டத்துடன் கண்ணீரும், ஆதரவுமாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி சிங்கம் படங்களை தாண்டி பார்ப்பவர்கள் அனைவர் கண்களையும் கலங்க வைத்தது. இதனால் தற்போது போட்டியாளர்களுக்கு தாங்கள் எதுக்காக வந்தோம் என்பதை உணர்ந்து வீட்டை நினைத்து அழுது புலம்புகின்றனர்.

தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரீஸ் டாஸ்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் என்ன செய்தாலும் அதை விட்டு விட்டு சிலை போல் நிற்க வேண்டும். இப்படி போட்டியாளர்களுக்கு ப்ரீஸ் செய்து அவர்களுடைய குடும்பங்களை கண்முன் நிறுத்தி சஸ்பென்ஸ் வைக்கும் விதமாக இந்த டாஸ்க் அமைந்துள்ளது.

இந்த டாஸ்க்கில் இன்று ஜனனியின் அம்மா மற்றும் தங்கை வந்துள்ளனர். இதன் பிறகு மும்தாஜின் அம்மாவும், அப்பாவும் வந்துள்ளனர். ஏற்கனவே உறவுகளை நினைத்து புலம்பி கொண்டிருக்கும் மும்தாஜுக்கு இந்த ப்ரீஸ் டாஸ்க் மேலும் அதிர்ச்சி தருகிறது. இதனால் மற்றவர்களிடம் உள்ள சண்டை, போட்டி, பொறாமை இவற்றையெல்லாம் மறந்து போட்டியாளர்கள் மீதமுள்ள 30 நாளையாவது குடும்பமாக வாழ்ந்து வெளிவருவார்களா என்று பாப்போம்.

பெத்தவங்க பாசத்துடன் ப்ரீஸ் டாஸ்க் வைத்து விளையாடும் பிக்பாஸ்