ads

பிக்பாஸ் சீசன் 2வின் கோப்பையை கைப்பற்ற போகும் அந்த நபர்

105 நாட்களை கொண்ட பிக்பாஸ் சீசன் 2வின் கோப்பையை கைப்பற்ற போவது யார் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் பலமாக அதிகரித்துள்ளது.

105 நாட்களை கொண்ட பிக்பாஸ் சீசன் 2வின் கோப்பையை கைப்பற்ற போவது யார் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் பலமாக அதிகரித்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 2வின் நேற்றுடன் 103வது நாளை கடந்துள்ளது. கலவரம், ரணகளம், போராட்டம்,  கண்ணீர், பாசம் போன்ற அனைத்தையும் கடந்து ஒரு வழியாக பிக்பாஸ் சீசன் 2 இறுதி வாரத்தை அடைந்துள்ளது. 16 போட்டியாளர்களை கடந்து மக்கள் மனதில் இடம்பிடித்த பிக்பாஸ் சீசன் 2வின் வெற்றியாளர் யார் என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்து விடும். 16 போட்டியாளர்களின் தற்போது நான்கு பேர் மட்டுமே உள்ளனர்.

இந்த நாவரில் யார் வெற்றியாளர் என்பதை மக்கள் வாக்களிப்பு மூலம் முடிவு செய்து வருகின்றனர். கடந்த வாரம் ஏவிக்சனில் இருந்து பிக்பாஸ் வீட்டில் விருந்தினர்களாக முதல் சீசன் போட்டியாளர்கள் மற்றும் இரண்டாவது சீசன் போட்டியாளர்கள் என அனைவருமே வருகை தந்துள்ளனர். இந்த சீஸனின் வெற்றியாளர் யார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இதில் கடந்த வாரம் வரை ரித்விகா தான் பிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளர் என்பது ஆழமாக பதிந்திருந்தது. ஆனால் இந்த வாரத்தில் மற்ற மூவருக்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்து சீசன் வெற்றியாளர் நான்கு பேரில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் இந்த வாரம் பிக்பாஸ் பைனலில் எந்த டிவிஸ்ட் வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் ரசிகர்கள் தங்கள் மனதை திடப்படுத்தி கொண்டு பைனலுக்காக காத்திருக்க வேண்டும். ஏனெனில் இது வரை ரசிகர்கள் என்ன எதிர்பார்கின்றனரோ அதற்கு எதிர்மாறாகவே பிக்பாஸ் யோசித்து முடிவு செய்கிறார். இதனால் பைனலில் டிவிஸ்ட் வைக்க பிக்பாஸ் எது வேண்டுமானாலும் செய்யலாம். 

பிக்பாஸ் சீசன் 2வின் கோப்பையை கைப்பற்ற போகும் அந்த நபர்