ads

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை.

மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை.

நடிகர் சல்மான் கான், 1998-ஆம் ஆண்டில் தனது படப்பிடிப்பின் போது பிளாக் பக் எனப்படும் இரண்டு அரியவகை மான்களை வேட்டையாடிய குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு 20 வருடங்களாக நீடித்து வருகிறது. முன்னதாக இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி அறிவிப்பதாக ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்தது.

அதன் படி இன்று நீதிபதி வழங்கிய தீர்ப்பில், சல்மான் கான் குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டு, அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 1998-ஆம் ஆண்டில் ராஜஸ்தான் நீதிமன்றம் குற்றவாளி இல்லை என அறிவித்தது. இதனை எதிர்த்து ராஜஸ்தான் அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல்முறையிடு செய்யப்பட்டது.

தற்போது இந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் ராஜஸ்தான் அரசுக்கு நீதி கிடைத்துள்ளது. ஆனால் தற்போது சல்மான் கான் வழக்கறிஞர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பெயில் கேட்டு ஒன்றை அளித்துள்ளார். 

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை