ads
பிராவோவின் தமிழ் படத்திற்கு தலைப்பு மாற்றம்
வேலுசாமி (Author) Published Date : Oct 22, 2018 16:54 ISTபொழுதுபோக்கு
வெஸ்ட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ப்ராவோவிற்கு தமிழ்நாட்டு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு இருக்கின்றது. அதற்கு காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ்சும், அவருடைய அசத்தலான நடனமும் தான். கிரிக்கெட் உலகில் பிரபலமான இவரை வைத்து 'உலா' என்ற படத்தில் வரும் 'ஏன்டா' என்ற பாடல் உருவாக்கப்பட்டது.
இந்த பாடலை பிராவோ பாடியது மட்டுமல்லாமல் நடனமும் ஆடி அசத்தியிருந்தார். இந்த பாடல் மூலம் பிரபலமான 'உலா' படத்தின் தலைப்பு தற்போது 'சித்திரம் பேசுதடி 2' என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த தலைப்பை வைத்து 2006இல் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான 'சித்திரம் பேசுதடி' படத்தின் இரண்டாம் பாகமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டு படத்திற்கும் எந்த சம்மதமும் இல்லை என்று படக்குழு மறுத்துள்ளது.
இந்த படத்தில் வித்தார்த் நாயகனாக நடிக்க, பாலிவுட் பிரபலம் ராதிகா ஆப்தே, அஜ்மல், காயத்ரி, நிவேதிதா உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சில எதிர்பாராத காரணங்களால் இந்த படத்தின் வெளியீடு தாமதமாகி கொண்டு வந்த நிலையில் தற்போது விரைவில் இந்த படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.