ads

இணைய தொடர்கள் மீது உச்ச நீதி மன்றத்தில் சமூக நல வழக்கு

வெப் சீரியல்களுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு

வெப் சீரியல்களுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு

சினிமா மற்றும் சின்ன திரைக்கு அடுத்ததாக மக்களுக்கு ஒரு புதிய பொழுது போக்காக இருப்பது  வெப் சீரியஸ்கள். நெட்பிலிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற ஆன்லைன் இணைய டி.வி. தளங்கள் வழியாக பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை மக்கள் அவர்களுடைய ஸ்மார்ட் போன்களிலும், ஸ்மார்ட் டி.வி.களிலும் கண்டு களிக்கின்றனர். ஆனால் அதில் வெளிவரும் நிகழ்ச்சிகளை கண்காணித்து சீர்திருத்த எந்த ஒரு சென்சார் அமைப்பும் இல்லை.இந்த கண்காப்பில்லாத வெப் சிரியஸ்கள் வழியாக  பல்வேறு வகையான கலாச்சார சீரழிவுகள் அந்த நிகழ்ச்சிகளில் காட்டப்படுவதாக  ஒரு சமூக பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒளிபரப்பான சேக்ரெட் கேம்ஸ் (Sacred Games) எனும் இணைய தொடரில் வசனங்கள் மிகவும் ஆபாசமாகவும், மிகவும் குறைவான ஆடைகள் அணிந்த நடிகர்கள் என பல வகையான அத்து மீறல்கள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றம் தலையிட்டு அனைத்து இணைய தொடர்களும் சென்சார் செய்யப்பட்ட பிறகே வெளியிடப்பட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை கிரக்டர் மற்றும் தர்மாதிகாரி ஆகிய  நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் இது தொடர்பான விளக்கங்கள் வழங்குமாறு மத்திய தணிக்கை குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இணைய தொடர்கள் மீது உச்ச நீதி மன்றத்தில் சமூக நல வழக்கு

இணைய தொடர்கள் மீது உச்ச நீதி மன்றத்தில் சமூக நல வழக்கு