சித்தார்த்துடன் முதன் முறையாக ஜோடி சேரும் கேத்ரின் தெரசா

       பதிவு : Jun 26, 2018 09:43 IST    
கேத்ரின் தெரசா, சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்து ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவன தயாரிப்பில் நடிக்க உள்ளார். கேத்ரின் தெரசா, சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்து ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவன தயாரிப்பில் நடிக்க உள்ளார்.

நடிகர் சித்தார்த்தின் எழுத்து மற்றும் தயாரிப்பில் இறுதியாக வெளியான படம் 'அவள்'. இந்த படத்திற்கு பிறகு மலையாளத்தில் 'கம்மர சம்பவம்'  படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிறகு தமிழில் சைத்தான் கே பச்சா என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தை புதுமுக இயக்குனர் சாய் சேகர் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் சித்தார்த்துடன் முதன் முறையாக இணைந்து நாயகியாக கேத்ரின் தெரசா நடிக்க உள்ளார். இது தவிர இந்த படத்தில் காமெடி நடிகர் சதிஷ், காளி வெங்கட், கபீர் சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

 

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சஷிகாந்த், சித்தார்த், கேத்ரின் தெரசா, சதிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு படப்பிடிப்பை துவங்கி வைத்தனர். 


சித்தார்த்துடன் முதன் முறையாக ஜோடி சேரும் கேத்ரின் தெரசா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்