ads

செக்க சிவந்த வானம் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

செக்க சிவந்த வானம் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செக்க சிவந்த வானம் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'செக்க சிவந்த வானம்' படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதியில் வெளியாகவுள்ளது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் நடிகர்கள் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது.  இதன் பிறகு இந்த படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பினையும் படக்குழு புது போஸ்டருடன் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டர் மூலம் பிரகாஷ் ராஜுக்கு மகன்களாக அரவிந் சாமி, சிம்பு, அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்த படத்தின் ட்ரைலர் நாளை காலை 10 மணியளவில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் படக்குழு சென்னையில் பிரமாண்டமாக நடத்த உள்ளது.

வரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந் சாமி உள்ளிட்ட அனைத்து படக்குழுவினரும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த படத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் 7பாடல்கள் உருவாகியுள்ளது. இந்த பாடலின் முன்னோட்டமும் இசை வெளியீட்டு விழாவில் நடக்க உள்ளது. 

செக்க சிவந்த வானம் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு