ads
நட்புனா என்னானு தெரியுமா படத்தை வெளியிட தடை செய்த நீதிமன்றம்
மோகன்ராஜ் (Author) Published Date : Jul 20, 2018 18:02 ISTபொழுதுபோக்கு
அறிமுக இயக்குனரான சிவகுமார் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நட்புனா என்னானு தெரியுமா'. இந்த படத்தில் சீரியல் நடிகர் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜ், ராஜு ஜெயமோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் சரவணன் மீனாட்சி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற வேட்டையன் கவின் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார்.
இந்த படத்தில் மூன்று நண்பர்கள் ஒரு பெண்ணை காதலிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. நட்பை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் வரும் 27ஆம் தேதி திரைக்கு வர தயாராக இருந்தது. இந்நிலையில் வரும் 30ஆம் தேதி வரை இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் தடை செய்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் மீது பிரபல விநியோகஸ்தரான மலேசியா பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில் "இந்த படத்தின் வெளிநாட்டு உரிமைக்காக தயாரிப்பாளர் ரவீந்தரிடம் 8 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்தேன். இதன் பிறகு பல முறை தயாரிப்பாளரிடம் பணம் கொடுத்துள்ளேன். இது மொத்தமாக தற்போது 25 லட்சத்து 20 ஆயிரத்தை எட்டியுள்ளது. ஆனால் எனக்கு திட்டமிட்ட தேதியில் படம் கிடைக்காததால் எனக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பணத்தை திருப்பி தரும்படி தயாரிப்பாளரிடம் கேட்டேன். ஆனால் இது வரை என்னுடைய பணம் வந்தடைய வில்லை. இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திடமும் புகார் அளித்துள்ளேன். இதனால் பணத்தை திருப்பி தரும் வரை இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என்று அவர் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படம் வரும் 27ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் வரும் 30ஆம் தேதி வரை இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.