ads
32 மொழிகளில் வெளியாகும் விக்ரமின் வரலாற்று படம்
ராதிகா (Author) Published Date : Jan 25, 2018 11:56 ISTபொழுதுபோக்கு
மகாபாரத காப்பியத்தில் இடம் பெற்ற மைய கதாப்பாத்திரங்களுள் ஒருவர் கர்ணன். இவர் அங்கா நாட்டின் அரசராக ஆண்டு வந்தார். மேலும் போர்க்களத்தில் அர்ஜுனனை வீழ்த்த கூடிய ஒருவராகவும் திகழ்ந்தார். இவர் வாழ்க்கை முழுவதும் துரதிஷ்டத்திற்கு எதிராகப் போராடியதோடு அணைந்து சூழ்நிலையிலும் தனது வார்த்தையை காப்பாற்றி சிறந்த வீரராக திகழ்ந்தார். இவரது வாழ்க்கை வரலாற்றை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1964ம் ஆண்டில் 'கர்ணன்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் இப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டிஜிட்டலில் வெளிவந்தும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.
இந்த வரலாற்று சார்ந்த படத்தினை தற்பொழுது 'மகாவீர் கர்ணன்' என்ற தலைப்பில் உருவாக இருக்கிறது. இந்த படத்தினை பிரபல மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் நியூயார்க்கில் வசித்து வரும் இந்தியர் ஒருவரால் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட உள்ளது. மேலும் இப்படத்தில் கர்ணன் வேடத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ளார். 300 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தினை தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியிட இருப்பதாக தகவல் முன்னதாவே வந்திருந்தது. இந்நிலையில் தற்பொழுது வெளிவந்த தகவலில் படம் தயாரான பிறகு 32மொழிகளில் படத்தினை திரையிட படக்குழு முடிவு செய்திருக்கிறதாம்.
மேலும் இப்படத்தின் துரியோதனன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பிரபல பாலிவுட் நடிகர்களிடம் பேச்சிவார்த்தை நடைபெற்று வருகிறதாம். தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ப்ரீ - ப்ரொடெக்சன் பணிகள் முடிவடைந்ததும் இந்தாண்டு இறுதிக்குள் படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருப்பதாகவும் அடுத்த ஆண்டில் திரையிடப்படுவதாகவும் படக்குழு முடிவு செய்துள்ளது.