ads

ஸ்ரீநாத் இசையமைப்பில் பாடகராக மாறியுள்ள மொட்டை ராஜேந்திரன்

மொட்டை ராஜேந்திரன் தற்போது பாடகராக மாறியுள்ளார்.

மொட்டை ராஜேந்திரன் தற்போது பாடகராக மாறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது வெளிவரும் பெரும்பாலான படங்கள் நடிகர் மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியாகின்றன. இந்த ஆண்டு மட்டுமே இதுவரை 18 படங்கள் வெளியாகியுள்ளது. இவர் ஆரம்பத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பல படங்களில் பணியாற்றியுள்ளார். இதன் பிறகு ஒரு நடிகராக பிதாமகன், தொட்டிஜெயா, தலைமகன் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

பின்பு நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வந்தது. வில்லனாக நடித்ததன் பிறகு காமெடி நடிகராக பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்களின் மூலம் இவருடைய நடிப்பிற்கும் குரலுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

தற்போது இவர் காமெடியில் அதிக கவனம் செலுத்தி வருவதால் ஏராளமான பட வாய்ப்புகள் வருகின்றன. இதனை அடுத்து இவர் பாடகராகவும் மாறியுள்ளார். இவருடைய குரலை ஆழமாக ரசிகர்கள் மனதில் பதிய வைக்க இசையமைப்பாளர் ஸ்ரீநாத் முடிவு செய்துள்ளார். இவருடைய இசையமைப்பில் உருவாகி வரும் புதிய படமொன்றில் மொட்டை ராஜேந்திரன் பாட்டு பாடி அசத்தியுள்ளார். இதன் பிறகு தமக்கு பாட்டு பாடும் வாய்ப்புகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக மொட்டை ராஜேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநாத் இசையமைப்பில் பாடகராக மாறியுள்ள மொட்டை ராஜேந்திரன்