சென்னை வடபழனி கோவிலில் நடைபெற்ற காமெடி நடிகர் முனீஸ்காந்த் திருமணம்

       பதிவு : Mar 26, 2018 11:50 IST    
காமெடி நடிகர் முனீஸ்காந்த் தேன்மொழி என்பவரை மணந்தார். காமெடி நடிகர் முனீஸ்காந்த் தேன்மொழி என்பவரை மணந்தார்.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகருள் ஒருவர் முனீஸ்காந்த். இவருடைய காமெடிக்கு ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு உண்டு. இவர் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நந்திதா நடிப்பில் 2014-இல் வெளியான 'முண்டாசுப்பட்டி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றிக்கு இவருடைய காமெடி மற்றும் நடிப்பு பக்க பலமாக இருந்தது.

இவர் இதற்கு முன்னதாக வெப்பம், எத்தன், கடல், சூது கவ்வும், நேரம், பிட்சா 2 போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதன் பிறகு 'முண்டாசுப்பட்டி' படத்தின் மூலம் காமெடி நடிகராக பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து இவர் ஜிகர்தண்டா, 10 எண்றதுக்குள்ள, பசங்க 2, போக்கிரி ராஜா, டார்லிங் 2, திருநாள், மாநகரம், புரூஸ் லீ, மரகத நாணயம், வேலைக்காரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

 

இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான படம் பிரபு தேவாவின் 'குலேபகாவலி'. இதனை தொடர்ந்து இவர் சண்டக்கோழி 2, விசுவாசம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவருடைய திருமணம் சென்னை வடபழனி கோவிலில் நடந்து முடிந்துள்ளது.

இன்று காலையில் நடைபெற்ற திருமணத்தில் தேன்மொழி என்பவரை மணந்துள்ளார். இவருடைய திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இவருடைய திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது 

 

சென்னை வடபழனி கோவிலில் நடந்து முடிந்த முனீஸ்காந்த் திருமணம்.சென்னை வடபழனி கோவிலில் நடந்து முடிந்த முனீஸ்காந்த் திருமணம்.
சென்னை வடபழனி கோவிலில் நடந்து முடிந்த முனீஸ்காந்த் திருமணம் சென்னை வடபழனி கோவிலில் நடந்து முடிந்த முனீஸ்காந்த் திருமணம்

சென்னை வடபழனி கோவிலில் நடைபெற்ற காமெடி நடிகர் முனீஸ்காந்த் திருமணம்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்