ads
நீர்நிலைகளில் கொள்ளளவை பெருக்க நடிகர் சிங்கம் புலி அவர்களின் சிறப்பான ஆலோசனை
வேலுசாமி (Author) Published Date : Apr 23, 2018 11:56 ISTபொழுதுபோக்கு
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவர் சிங்கம் புலி அவர்கள். வைகைபுயலின் காமெடிக்கு பிறகு மாயாண்டி குடும்பத்தார், தேசிங்கு ராஜா, மனம் கொத்தி பறவை போன்ற படங்களில் இவருடைய அலப்பறைகள் ரசிகர்களிடம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இவருடைய நடிப்பு திறமைக்கு ரசிகர்கள் தற்போதுவரையிலும் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர். இவர் ஒரு காமெடி நடிகராவதற்கு முன்பு இவருடைய இயக்கத்தில் தல அஜித்தின் 'ரெட்' மற்றும் சூர்யாவின் 'மாயாவி' போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இவர் உதவி இயக்குனராக அருணாச்சலம், ராஜா, ஆஞ்சநேயா போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார். இப்படி திரைத்துறையில் நடிகர், இயக்குனர் மற்றும் வசன எழுத்தாளராகவும் பணியாற்றி வரும் இவர் தற்போது பொது மக்களுக்கு ஒரு நல்ல செய்தி ஒன்றை வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் "வருகின்ற வெள்ளிக்கிழமை (27-04-2018) அன்று தேனீ மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதாவது ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணி துறை இதற்குட்பட்ட 412 நீர்நிலைகள், கம்மாய்கள் குளங்களில் இருக்கின்ற வண்டல் மண், கிராவல் மண், களிமண் இவைகளை நீங்கள் இலவசமாக எடுத்து செல்லலாம். நிபந்தனைகளுக்கு உட்பட்டு. அதாவது இந்த வகை மண்வகைகளை நீங்கள் எடுத்து சென்று மண்பானைகள் செய்யவும் வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தலாம். கிராவல் மண்ணை எடுத்து சென்று புதிய வீடு கட்டுவதற்கு பேஸ்மண்ட் அடித்தளத்திற்கு உபயோகப்படுத்தலாம்.
வண்டல் மண்ணை எடுத்து சென்று தோட்டம் மற்றும் வயல்களில் பயன்படுத்தலாம். பொது மக்கள் இந்த மண்வகைகளை அதிகாரிகள் இலவசமாக எடுத்து செல்ல சொல்கிறார்கள், ஏனென்றால் வருகின்ற ஜூன் மாதத்திற்கு மேல் பெரிய மழை பெய்ய போகிறது. அப்படி மழை வரும்போது குளங்களில் போன்ற நீர்நிலைகளில் அதிகமான தண்ணீரை சேமிக்க தூர் வார வேண்டும். இந்த தூர் வார வேண்டிய மண்ணை நீங்கள் இலவசமாக நிபந்தனைகளுட்பட்டு எடுத்து செல்லலாம்.
இதனால் நீங்கள் வருகின்ற 27-ஆம் தேதி முதல் வட்டாட்சியாளர், ஊராட்சியாளர் அவர்களிடம் விண்ணப்பித்து மண்களை எடுத்து சென்று உபயோகப்படுத்த ஓர் அறிய வாய்ப்பு. அனைத்து நீர்நிலைகளிலும் நீரின் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும். நன்றி" என அவர் தெரிவித்துள்ளார். இது அப்பகுதி மக்களுக்கு பொன்னான வாய்ப்பாகும்.
இன்றைய தலைமுறையினருக்கு மழை நீரை சேமிக்கும் எண்ணமே இருப்பதில்லை. இதனால் நமது அடிப்படை தேவைக்காக வானிலிருந்து எப்போதாவது விழும் மழை நீரையும் சேமிக்க தவறுவதால் அது கழிவு நீர்களில் கலந்து வீணாகிறது. இன்று முதலாவது மழை நீரை சேமியுங்கள், நீர்வளத்தை பெருக்குங்கள்..நல்ல பதிவை பொது மக்களுக்கு தெரிவித்த நடிகர் சிங்கம் புலி அவர்களுக்கு நன்றி..
Good information pic.twitter.com/TNfrTRs0Wo
— தலதளபதி (@iamArunkumarM) April 22, 2018