ads

வளர்ந்து வரும் காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு இந்த ஆண்டின் காமெடி கில்லாடி விருது

காமெடி நடிகர் யோகி பாபு ஜி தமிழ் 2018 ஆண்டுக்கான காமெடி கில்லாடி விருதினை பெற்றுள்ளார்.

காமெடி நடிகர் யோகி பாபு ஜி தமிழ் 2018 ஆண்டுக்கான காமெடி கில்லாடி விருதினை பெற்றுள்ளார்.

வளர்ந்து வரும் காமெடி நடிகர்களுள் ஒருவர் யோகிபாபு. இவருடைய காமெடிக்கு தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தமிழ் திரையுலகில் கடந்த 2009-இல் வெளியான 'யோகி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தன்னுடைய பெயரின் படத்தில் அறிமுகமானாதால் என்னவோ தெரியவில்லை, இவருக்கு தமிழ் திரையுலகில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவர் கடந்த 8 வருடங்களாக 65 படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் ஷாரூக்கானுடன் இணைந்து 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்திலும் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் தற்போது கோலமாவு கோகிலா, எச்சரிக்கை, செம, 100% காதல், குப்பத்து ராஜா, தளபதி 62, ஜூங்கா, கொரில்லா போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் முதலில் இயக்குனர் ராம் பாலாவுடன் இணைந்து 'லொள்ளு சபா' நிகழ்ச்சியில் பணியாற்றி வந்தார். இதன் பிறகு இவர் இரண்டு வருடங்கள் சீரியலில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இதனை அடுத்து இவருக்கு திரையுலகில் அறிமுகமாகும் வாய்ப்பு 'யோகி' படத்தின் மூலம் யோகமடித்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு 2018-ஆம் ஆண்டுக்கான 'ஜி தமிழ் காமெடி கில்லாடி' விருது கலாட்டா நட்சத்திர விழாவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை 'மெர்சல்' தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி மற்றும் டாக்டர் மரியசீனா ஜான்சன் ஆகியோர் வழங்கினர்.

வளர்ந்து வரும் காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு இந்த ஆண்டின் காமெடி கில்லாடி விருது