ads

கொரோனா தான் சொல்ல வேண்டும், தமிழகத்தில் எப்போது தியேட்டர்கள் திறக்கப்படும்?

தமிழகத்தில் எப்போது தியேட்டர்கள் திறக்கப்படும்

தமிழகத்தில் எப்போது தியேட்டர்கள் திறக்கப்படும்

இந்தியாவில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து படிப்படியாக மூடப்பட்டன. மார்ச் மாதம் 6ஆம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படங்கள், நான்கு நாட்கள் மட்டுமே திரையரங்கில் ஓடின, பின்னர் கொரோனா வைரஸ் தொத்து காரணத்தினால் அனைத்து தியேட்டர்களும் காலவரையின்றி மூடப்பட்டது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களை தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மூட ஆணையிட்ட பின், தியேட்டர்கள் மூடப்பட்டது. இதனால் மார்ச் 6ஆம் தேதி வெள்ளிகிழமை வெளியான படங்களின் வசூல் கேள்விக்குறியானது. முழுமையாக ஒரு வாரம் ஓடியிருந்தால், ஓரளவிற்கு வசூல் ஆகி இருக்கும், ஆனால் ரிலீஸ் ஆன படங்களின் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நஷ்டமே.

மார்ச் மாதித்தில் தொடங்கிய ஊரடங்கு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மருத்துவர்களின் பரிந்துரை காரணமாக ஊரடங்கு மேலும் 14 நாட்கள் நீட்டிக்க வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை. அப்படியே ஊரடங்கு முடிவிற்கு வந்தாலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து தியேட்டர்கள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காரணம், மக்கள் அதிகம் கூட வாய்ப்பு உள்ள இடங்களை அரசாங்கம் திறக்க அனுமதி அளிக்கவேண்டும் என்றால் , கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் மற்றும். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மிகுந்த அளவில் குறைந்தால் மட்டுமே தியேட்டர்கள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தான் சொல்ல வேண்டும், தமிழகத்தில் எப்போது தியேட்டர்கள் திறக்கப்படும்?