ads

நடிகர் தனுஷின் மாரி 2 பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அறிவிப்பு

நடிகர் தனுஷின் மாரி 2 பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அறிவிப்பு

நடிகர் தனுஷின் மாரி 2 பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அறிவிப்பு

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 17ஆம் தேதி வெளியான 'வடசென்னை' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று தற்போது வரையிலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு தனுஷ், இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி 2' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதில் கடந்த 2015இல் வெளியான 'மாரி' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது இறுதி கட்ட பணிகளில் உள்ளது. முன்னதாக முழு படப்பிடிப்பினையும் முடித்த படக்குழு தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் நவம்பர் 2ஆம் தேதியில் வெளியிடுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் பிறகு இந்த படம் வரும் டிசம்பரில் கிறிஸ்துமஸில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் தனுஷின் மாரி 2 பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அறிவிப்பு