ads

தனுஷின் மாரி 2 பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு தேதி அறிவிப்பு

தனுஷின் மாரி 2 பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு தேதி அறிவிப்பு

தனுஷின் மாரி 2 பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு தேதி அறிவிப்பு

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாரி 2'. இந்த படத்தில் தனுஷ் அதே குறும்புக்கார ரவுடியாகவும், நாயகியான சாய் பல்லவி ஆனந்தி கதாபாத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநராகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து வரலட்சுமி, கிருஷ்ணா, ரோபோ சங்கர், வித்யா பிரதீப், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் டிசம்பர் 21இல் வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பை இயக்குனர் பாலாஜி மோகன் வெளியிட்டுள்ளார். இதன்படி யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் 'ரவுடி பேபி' என்று தொடங்கும் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தனுஷின் மாரி 2 பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு தேதி அறிவிப்பு