ads

தனுஷின் மாரி 2 பர்ஸ்ட் லுக் மற்றும் வெளியீடு தேதி அறிவிப்பு

மாரி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வெளியீடு தேதி வெளியாகியுள்ளது.

மாரி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வெளியீடு தேதி வெளியாகியுள்ளது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்கு பிறகு வெளியாகியுள்ள வடசென்னை படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வந்த 'மாரி 2' படத்தின் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளதால் இந்த படமும் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில் வெளியிடுவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் டிசம்பர் 25இல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பாகத்தில் தனுசுக்கு ஜோடியாக அகர்வால் நடித்திருந்தார், இரண்டாம் பாகத்தில் அவருக்கு  பதிலாக சாய் பல்லவி நடித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா.இசையமைத்துள்ளார். தனுஷின் கேலியான ரவுடித்தனத்தையும், யுவனின் தெறிக்கும் இசையயும் காண ரசிகர்கள் உள்ளனர்.;

தனுஷின் மாரி 2 பர்ஸ்ட் லுக் மற்றும் வெளியீடு தேதி அறிவிப்பு