ads
தனுஷின் மாரி 2 வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு
வேலுசாமி (Author) Published Date : Nov 08, 2018 17:06 ISTபொழுதுபோக்கு
வடசென்னை படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'மாரி 2' படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது இந்த படம் வரும் டிசம்பர் மாதத்தில் 21ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பிறகு இந்த படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்களை படக்குழு வெளியிட்டு வருகின்றது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக சாய்பல்லவி 'ஆனந்தி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் பாகத்தில் சனிக்கிழமை மற்றும் அடிதாங்கி கதாபாத்திரங்களில் நடித்திருந்த ரோபோ சங்கர் மற்றும் கல்லூரி வினோத் ஆகியோரும் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர்.
இது தவிர வரலட்சுமி கோமதி என்ற கதாபாத்திரத்தில் தனுசுக்கு நண்பனாக நடிகர் கிருஷ்ணாவும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னதாகவே வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.