ads

ராட்சசன் இயக்குனருடன் கைகோர்த்துள்ள நடிகர் தனுஷ்

முண்டாசு பட்டி, ராட்சசன் படங்களை இயக்கியுள்ள ராம் குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார்.

முண்டாசு பட்டி, ராட்சசன் படங்களை இயக்கியுள்ள ராம் குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார்.

முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் இயக்குனராக என்ட்ரி ஆன ராம் குமார் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் 'ராட்சசன்'. நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ராம் குமார் தன்னுடைய அடுத்த படத்திற்கு நடிகர் தனுசுடன் இணைந்துள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று 'வட சென்னை' படம் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படம் எழுத்தாளர் பூமணி என்பவரின் நாவலை தழுவியதாக உருவாகவுள்ளது. இந்த படத்தினை முடித்த பிறகு 'ராட்சசன்' இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் இணைந்து நடிக்க தனுஷ் முடிவு செய்துள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் ராம் குமார் தனுஷிடம் கதை சொன்ன பிறகு, கதையும் ஓகே ஆகிவிட்டதாம். இதனால் இயக்குனர் வெற்றி மாறன் இயக்க உள்ள அடுத்த படத்தில் நடித்து முடித்த பிறகு ராம் குமார் இயக்கத்தில் நடிக்க தனுஷ் கமிட் ஆகி விட்டார். இந்த படத்தினை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தினை முடித்த பிறகு மீண்டும் வெற்றிமாறன் கூட்டணியில் 'வடசென்னை' இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். 

ராட்சசன் இயக்குனருடன் கைகோர்த்துள்ள நடிகர் தனுஷ்