சிம்பு பாடலை வெளியிடும் தனுஷ்

       பதிவு : Nov 28, 2017 10:41 IST    
dhanush release simbu songs dhanush release simbu songs

 இயக்குனர் சேதுராமன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சக்க போடு போடு ராஜா'. இந்த படத்தை விடிவி ப்ரொடக்சன் சார்பில் விடிவி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தில் சந்தானம், வைபவி, விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்திருக்கிறார். நடிகராக இருந்த சிம்பு தற்போது இந்த படத்தில் முதன் முதலாக இசையமைப்பாளராக மாறியிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.

மேலும் இந்த படம் டிசம்பர் 22-இல் வெளியிடுவதாக படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் டிசம்பர் 6-ஆம் தேதி படத்தின் பாடல்களை வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகிறது. இந்த பாடல்களை நடிகர் தனுஷ் வெளியிடுவதாக நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். நடிகர் சிம்புவின் பாடல்களை நடிகர் தனுஷ் வெளியிடுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.

 

sakka podu podu raja movie stillssakka podu podu raja movie stills

சிம்பு பாடலை வெளியிடும் தனுஷ்


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்