சக்க போடு போடு ராஜா இசை வெளியீடு தேதி அறிவிப்பு

       பதிவு : Nov 27, 2017 20:10 IST    
sakka podu  podu raja movi stills sakka podu podu raja movi stills

காமெடி நடிகர் சந்தானம் தற்பொழுது நாயகனாக பல படங்களில் கலக்கி வருகிறார். இவர் நடித்து வரும் ஓடி ஒடி உழைக்கணும், சக்க போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி போன்ற படங்களில் படப்பிடிப்புகள் முடிவந்துள்ளது. சேதுராமன் இயக்கத்தில் VTV கணேஷ் தாயாருக்கும் சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் முதல் முதலாக சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.    

இந்த படத்தின் பஸ்ட் லுக், பாடல் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் இந்த படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமானத்தினால் சிம்பு ரசிகர்கள் மிக பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ச்சியை தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து சிம்பு வலைதளத்தின் மூலம் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு தேதியை இன்று மாலை அறிவிப்பதாக படக்குழுவினர் தகவலை வெளியிட்டுள்ளனர்.  

 

வைபவி சாண்டில்யா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் விவேக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சம்பத் ராஜ், நாராயன் லுக்கி, ஆர்யன், ரோபோ சங்கர், தயாரிப்பாளர் VTV கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.    
 


சக்க போடு போடு ராஜா இசை வெளியீடு தேதி அறிவிப்பு


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்