மீண்டும் வருவேன் சிம்புவின் சஸ்பென்ஸ்

       பதிவு : Nov 13, 2017 21:29 IST    
மீண்டும் வருவேன் சிம்புவின் சஸ்பென்ஸ்

சரவணா, வல்லவன், காளை, விண்ணை தாண்டி வருவாயா போன்ற தொடர்ந்து வெற்றியை கொடுத்த சிலம்பரசன் தற்பொழுது வரும் படங்களில் தோல்வியை சந்தித்து வருகிறார். இந்நிலையில் சந்தானம் நாயகனாக நடித்து வெளிவர உள்ள சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.    

இந்த படத்தில் வெளியான பாடலுக்கு நல்ல வரவேற்பு பெற்றதினை தொடர்ந்து அவர் ரசிகர்களுக்கு நன்றியும் பிற தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார். இந்நிலையில் இதனை தொடர்ந்து ‘தட்றோம் தூக்கறோம்' பாடலின் மூலம் அதிகளவு ஹிட் ரசிகர்களிடம் இருந்து வரவேற்கப்பட்டது. சிம்பு நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பினை தராதநிலையில் பாடலுக்கு எதிர்பார்த்ததை விட அதிகளவு வரவேற்புகள் கிடைத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.   

 

இதன் காரணத்தினால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி பெரும் வகையில் சிம்பு ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். எல்லோருக்கும் வணக்கம் என தொடங்கிய சிம்பு, சக்க போடு போடு ராஜா படத்தின் பாடல் மற்றும் ட்ரைலருக்கு நல்ல ஒரு வரவேற்பு தந்திருந்திங்க, ரொம்ப நாள் ஆச்சி, உங்ககிட்ட பேசணும்னு தோணிச்சி, என்னோட மத்த பாடலுக்கும் நல்ல வரவேற்பினை கொடுத்து வரீங்க, இப்ப சோசியல் மீடியாவில் வேற இல்ல, பசங்க எல்லாம் கொஞ்சம் பாவம், நானும் உங்கள மிஸ் பண்றேன், பரவாயில்ல நீங்க எல்லாம் இருக்கீங்க நம்பிக்கை இருக்கு, இது படத்தோட கேட்டப் இல்ல இது வேற ஒரு விஷயம் வருது, வருவேன்.....நம்புங்க, என்று 52 நொடிகள் பேசியிருந்தார். தற்பொழுது இந்த வீடியோ பரவலாக வைரலாகி வருகிறது.    

இதில் சிம்பு வேற ஒரு விஷயம் வருது என ரசிகர்களுக்கு ரகசிய தகவல் தெரிவித்துள்ளார். 
    

 


மீண்டும் வருவேன் சிம்புவின் சஸ்பென்ஸ்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்