ads
ரசூல் பூக்குட்டியை எந்திரன் ரஜினியுடன் ஒப்பிடும் சங்கர்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 13, 2017 19:45 ISTபொழுதுபோக்கு
அகாடமி விருதினை பெற்ற பிரபல சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி அவரது சொந்த ஊரான கேரளாவில் ஆண்டிற்கு ஒரு முறை பிரமாண்டமான முறையில், பல லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொள்ளும் விஷேம் பெற்ற திருச்சூர் பூரம் (திருவிழா) பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் முதல் முதலாக நாயகனாக நடித்துள்ளார்.
பிரசாந்த் பிரபாகர் இயக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு கதை சொல்லட்டுமா படத்தின் முக்கிய அம்சம் கண்பார்வை அற்றவர்கள் முழு படத்தினையும் புரிந்து கொள்ளும் வகையில் சவுண்ட் மூலமாகவே கதையை சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த படத்தின் இசை வெளியீடு ஏ ஆர் ரகுமான் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சங்கர், நாசர், வைரமுத்து, ரேவதி, கே எஸ் ரவிக்குமார், சரத் குமார், ராதிகா, குஷ்பூ, பாக்யராஜ் என பல நடிகர்கள் மற்றும் பிரபல நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
இயக்குனர் சங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு ரகுல் பூக்குட்டி பற்றி சில வார்த்தைகள் பேசினார். திருச்சூரில் நடக்கக்கூடிய பூரம் திருவிழா பத்திரிக்கையில் வெளிவரும் புகைப்படத்தில் பார்த்ததுண்டு. அதனை படமாக எடுத்திருக்கும் ரசூல் பூக்குட்டி கதையை பற்றி சொல்லும்போது வியப்பாக இருந்தது. பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் மத்தியில் 300 கலைஞர்களை கொண்டு ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வரை நடைபெறும் சண்ட, கொம்பு போன்ற வாத்தியங்களை வைத்து வாசிக்கிற அற்புதமான திருவிழாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என்பதினை சொல்லும் போது ஆச்சர்யமா இருந்தது என்று கூறினார்.
இதனை அடுத்து சங்கர் சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி திறமைகளை வெளியிட்டத்தினை தொடர்ந்து இசை வெளியீட்டின் போது ரசூல் புகைப்படத்தை பார்த்தால் எந்திரன் ரஜினி கையில் கன் (துப்பாக்கி) வைத்திருப்பது போன்று இருப்பதாகவும் கூறினார்.
இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர் சங்கர் பேசியதை பார்த்தால் படத்தின் ஆச்சர்யங்களும், வியக்க வைக்கும் பல கதை நுணுக்கங்களும் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.