சங்கருடன் இணையும் அனிருத்!

       பதிவு : Nov 07, 2017 16:09 IST    
சங்கருடன் இணையும் அனிருத்!

கமல்ஹாசன் தற்பொழுது அரசியலில் இறங்குவதற்கான வேளையில் முழுவதுமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் 1996ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்பெற்ற ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இருபது ஆண்டுகள் கழித்து இப்பொழுது மீண்டும் கமல்ஹாசனை  வைத்து எடுக்கவுள்ளார்.

கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்திருந்த இந்தியன் படத்தில் மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருந்தார்.   

 

பெரும்பாலும் சங்கர் இயக்கிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு பதில் அனிருத் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் அனிருத் தெலுங்கு திரையுலகில் இசையமைப்பாளராக பணிபுரியும் இந்நிலையில் சங்கர் படத்திற்கு இசையமைப்பாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது.    


சங்கருடன் இணையும் அனிருத்!


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்