2.0 படத்தில் அக்ஷய் குமாரின் 12 மாறுபட்ட தோற்றம்

       பதிவு : Nov 06, 2017 16:01 IST    
2.0 படத்தில் அக்ஷய் குமாரின் 12 மாறுபட்ட தோற்றம்

சங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த 2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீடு பிரமாண்டமான முறையில் துபாயில் நடைபெற்றது. இந்நிலையில் படத்தினை அடுத்த வருடம் ஜனவரி 25ம் தேதி வெளியிடவுள்ளது.    

படத்தின் வெளியிடுவதற்கான பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிற நிலையில் படத்தின் சில சுவாரஷ்யமான தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது வந்த தகவலின் படி, ரஜினிகாந்த் புரொஃபஸர் ‘போரா’வாகவும் ரோபோ ‘சிட்டி’யாகவும் இரு வேடத்தில் நடித்திருக்கிறார். என்னோட வேடத்தை விட அக்ஷய் வேடம் தான் எனக்கு பிடிக்கும் என்று ரஜினி சொன்னது உண்மைதான்.

 

இப்படத்தில் ரஜினியை காட்டிலும் அக்ஷய் அதிக அளவு ஆக்சன் காட்சிகளில் இறங்கியுள்ளார். இதில் 12  கெட்-அப்களில் அக்ஷய் வருவதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் அக்‌ஷய்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் வித்தியாசமாக வரவேண்டும் என்பதற்காக ஒளிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி இயற்கை முறையில் பல வித்தியாசமான ஒலியை தேர்வு செய்து வருகிறார்.


2.0 படத்தில் அக்ஷய் குமாரின் 12 மாறுபட்ட தோற்றம்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்