ads

கேளம்பாக்கத்தில் ரசிகர்களுடன் சந்திப்பு - கமல் ஹாசன்

கேளம்பாக்கத்தில் ரசிகர்களுடன் சந்திப்பு - கமல் ஹாசன்

கேளம்பாக்கத்தில் ரசிகர்களுடன் சந்திப்பு - கமல் ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் நவம்பர் 7-இல் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக ஏற்கனவே தெரிவித்தார். இதனை அடுத்து நேற்று கேளம்பாக்கத்தில் ரசிகர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியது, "ஆர்வக்கோளாறில் பதவிக்காக வந்துவிட்டதாக நினைக்காதீர்கள். ஏழைகளும் பணக்காரர்களும் மழையால் அவதிப்பட்டுவருகின்றனர். ஏழைகளுக்கும் ஒரே நிலைதான் பணக்காரர்களுக்கும் ஒரே நிலை தான். கடந்த 2015-ஆம் ஆண்டு வந்த வெள்ளத்தில் தத்தளித்த மக்களுக்காக தமிழக அரசு நிவாரண பொருட்களை வழங்கியது. அதை அதிகாரிகள் பறித்து அதில் ஸ்டிக்கரை ஒட்டியது பிச்சையெடுப்பதை விட கேவலம்.

அழிவு வரும் வரை காத்திருக்க கூடாது. கொற்கையில் சுனாமி வந்ததால் பாண்டியர் தலைநகர் மதுரைக்கு போனது. எப்போதும் வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும். திருடர்கள் பெரியவர்கள் போல் நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னை அடிக்கடி தட்டி பார்க்க நான் ஒன்றும் மிருதங்கம் இல்லை. குழந்தை பிறக்க 10 மாத காலம் தேவைப்படும் அதைப்போல அரசியல் கட்சி தொடங்க சில காலம் தேவைப்படும்.

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி ஆனால் அதை  நவம்பர் 7-இல் தொடங்க போவதில்லை. எனது தந்தை இறப்பிற்கு பிறகு நவம்பர் 7-இல் எனது பிறந்த நாளை கொண்டாடுவதே இல்லை." என்றார்.  தற்போது இந்து தீவிரவாதம் குறித்த அவரது கருத்துக்கு பலரிடம் எதிர்ப்பு வந்த நிலையில் ஆந்திரப்பிரதேசத்திலும் கமலுக்கு எதிராக அவரது உருவபொம்பையை எரித்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கேளம்பாக்கத்தில் ரசிகர்களுடன் சந்திப்பு - கமல் ஹாசன்