கமல்ஹாசன் பிறந்தநாளில் வெளிவரும் 'விஸ்வரூபம் 2' ட்ரைலர்

       பதிவு : Nov 04, 2017 13:58 IST    
கமல்ஹாசன் பிறந்தநாளில் வெளிவரும் 'விஸ்வரூபம் 2' ட்ரைலர்

பல தடைகளை தாண்டி உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து மற்றும் இயக்கிய 'விஸ்வரூபம்' படம் 2013-இல் ஜனவரி மாதம் வெளியானது. இந்தியில் 'விஸ்வரூப்' என்ற தலைப்பிலும் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை அப்போதே தயாரிக்க தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியானது. மேலும் விஸ்வரூபம் 2 பாகத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு விற்றுவிட்டதாகவும் மீதமுள்ள காட்சிகளை எடுக்க அவர் பணம் தர மறுத்ததால் 'விஸ்வரூபம் 2' படத்தை கமலே கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியானது.

மேலும் இந்த படத்தின் காட்சிகளுக்காக துருக்கி சென்றிருந்தார். அங்கிருந்து சென்னையில் உள்ள ராணுவ முகாமில் மீதமுள்ள காட்சிகளை எடுப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் 'விஸ்வரூபம் 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து ட்ரைலர் கடந்த ஜூன் மாதம் வெளிவரும் என வதந்தி பரவியது. இதை மறுத்து கமல்ஹாசன் தனது டிவிட்டரில் விஸ்வரூபம் 2 படத்தின் வதந்தியை நம்ப வேண்டாம். விரைவில் வெளியிடு தேதி அறிவிக்கப்படும் என்று மறுத்தார். 

 

தற்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் ட்ரைலர் கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7-இல் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.


கமல்ஹாசன் பிறந்தநாளில் வெளிவரும் 'விஸ்வரூபம் 2' ட்ரைலர்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்