ads

வருமுன் காப்போம் ட்விட்டரில் கமல்ஹாசன்

வருமுன் காப்போம் ட்விட்டரில் கமல்ஹாசன்

வருமுன் காப்போம் ட்விட்டரில் கமல்ஹாசன்

கமல்ஹாசன் தனது செய்திகளை எல்லாம் ட்விட்டரில் பதிவு செய்து மக்களிடம் விழிப்புணர்வை காட்டிவருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து வரும் கோசஸ்தலையாறு பற்றி பதிவு செய்ததோடு நேரில் சென்று பார்வையிட்டார்.    

இந்நிலையில் மழை வெள்ளத்தின் காரணத்தினால் ஏற்படும் சீர்கேடுகள் பற்றிய செய்திகளை இன்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதில் 'இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல் பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன' ' என கூறினார். 

"சென்னையில் தென்மேற்கு வடகிழக்குப் பகுதிகள் நீரில் மூழ்கத் தயாராகிக்  கொண்டிருக்கின்றன சேலயூர் ஏரி, கூடுவாஞ்சேரி நந்திவரம் பெல்ட் ஏரி, சிட்லபாக்கம் ஏரி நாராயணபுரம் முடிச்சூர்  ஏரிகள் நிரம்பி வழிய அதிக நேரமாகாது. நீர் நிலை ஆவலர்களுக்கோ மக்களுக்கோ இவ்வேரிகளின் கொள்ளளவு தெரியாது.  நீர் வரத்து பாதைகளும், நீர் வெளியேறும் பாதைகளும் தெரியாது. தெரியாது என்பதை விட நில அபகரிப்புக்கு வசதியாய் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதே கசந்து குமட்டும் உண்மை.  

 நன்மங்கலத்திலிருந்து மற்றொரு ஏரிக்கு நீர் வரும் பாதையை மரித்துக் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் 2015 லேயே உத்தரவு பிரப்பித்து விட்டது எனினும் இன்று வரை சட்டம் மீறப்பட்டே வருகிறது. அப்பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்கவும் குரலெழுப்பவும் ஊடகங்கள் தயவாய்  உதவ வேண்டும் வருமுன் காப்போம், நித்திரை கலைப்போம்" என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.       

வருமுன் காப்போம் ட்விட்டரில் கமல்ஹாசன்