கமல் ஹாசனை போட்டு தள்ள வேண்டும் - இந்து மகாசபை துணை தலைவர்

       பதிவு : Nov 04, 2017 16:05 IST    
கமல் ஹாசனை போட்டு தள்ள வேண்டும் - இந்து மகாசபை துணை தலைவர்

கமல் ஹாசன் கடந்த வாரம் வெளியான இதழில் இந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்தார். இது நாடெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கமல் ஹாசனுக்கு எதிராக உத்திரபிரதேசத்தில் வழக்கு பதிவானது. நடிகர் பிரகாஷ்ராஜ் கமல் ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் இந்து மாகா சபை துணை தலைவர் பண்டிட் அசோக் சர்மா அவரது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். 

அவர் கூறியது, "கமல்ஹாசன் போன்ற சிந்தனை கொண்டவர்களை தூக்கிலிட்டு கொல்ல வேண்டும். இந்து மக்களின் நம்பிக்கைக்கு எதிராக எவரேனும் கூறினால் அவர் இந்த புனித மண்ணில் வாழ தகுதியற்றவர்கள். கமல் ஹாசன் குறிப்பிட்ட வார்த்தைக்கு அவரை தூக்கிலிட வேண்டும்" என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

மேலும் இந்து மகா சபையின் மீரட் பொறுப்பாளர் அபிஷேக் அகர்வால்,"கமல்ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்ந்த படங்களை நம் கட்சியினர் மற்றும் இந்திய மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். இந்து மதத்தை பற்றி பேசிய யாரையும் மன்னிக்க கூடாது" என்று தெரிவித்துள்ளார். 


கமல் ஹாசனை போட்டு தள்ள வேண்டும் - இந்து மகாசபை துணை தலைவர்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்