'வேலைக்காரன்' படப்பிடிப்பு நிறைவு - அடுத்து இசை நிகழ்ச்சிக்கு தயாராகும் படக்குழு

       பதிவு : Nov 13, 2017 18:16 IST    
'வேலைக்காரன்' படப்பிடிப்பு நிறைவு - அடுத்து இசை நிகழ்ச்சிக்கு தயாராகும் படக்குழு

இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'வேலைக்காரன்'. இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பின் கீழ் ஆர்.டி.ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த  படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், நயன்தாரா, ரோபோ சங்கர், சினேகா, விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 

இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து அனிருத் தற்போது பாலிவுட்டில் களமிறங்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்ததாக நடிகர் ஆர்.ஜெ.பாலாஜி தனது டிவிட்டரில் செல்பி எடுத்து தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இசை நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

 

'வேலைக்காரன்' படம் வரும் கிறிஸ்துமஸ் விருந்தாக ரசிகர்களுக்கு அமைய இருக்கிறது. அதே நாளில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'குப்பத்து ராஜா' படமும் வெளிவர இருக்கிறது. இரண்டு படங்களுக்குமே எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளது.


'வேலைக்காரன்' படப்பிடிப்பு நிறைவு - அடுத்து இசை நிகழ்ச்சிக்கு தயாராகும் படக்குழு


செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

ராசுசெய்தியாளர்