வேலைக்காரன் படத்தின் முக்கிய தகவல்!

       பதிவு : Nov 09, 2017 11:48 IST    
வேலைக்காரன் படத்தின் முக்கிய தகவல்!

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகளவு ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்தல் பாஹத் பாசில், நயன்தாரா, சினேகா, விஜய் வசந்த், ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பஸ்ட் லுக் போஸ்டர், டீசர், single track பாடல் போன்றவை வெளிவந்து படத்திற்கு நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.        

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்த 'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடலுக்கு வரவேற்பு பக்கா மாஸ் அடித்து ரசிகர்களை மிரளவைத்தது. இந்நிலையில் இரண்டாவது Single track "இறைவா" + "உயிரே" என்ற தலைப்பில் நவம்பர் 2ம் தேதி வெளிவந்து நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. 

இந்நிலையில் படத்தின் இறைவா பாடலின் லிரிக்ஸ் வீடியோ இன்று மாலை 7 மணிக்கு வெளிவரவுள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் பதிவு செய்திருந்ததை பார்த்த ரசிகர்கள் பாடலுக்காக அதிகளவு ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருகின்றனர்.  


வேலைக்காரன் படத்தின் முக்கிய தகவல்!


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்