நடிகர் சூரியின் ஹோட்டலை திறந்து வைத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்

       பதிவு : Nov 01, 2017 15:48 IST    
நடிகர் சூரியின் ஹோட்டலை திறந்து வைத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகில் ஹீரோவை விட காமெடியனுக்கு தான் வரவேற்பு அதிகமாக உள்ளது. காமெடிக்காக மட்டும் படத்தை பார்ப்பவர்கள் ஏராளமானோர். 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் பரோட்டாவை வைத்து பிரபலமானவர் நடிகர் 'சூரி'. இவருடைய திறமைக்கும் நடிப்புக்கும் ஏற்ப பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது சூரி கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். 

மேலும் அவருடைய உறவினர்களின் குழந்தைகளையும் இவர்தான் படிக்க வைக்கிறார். நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் வந்தால் மட்டுமே முகத்தை திரையில் காட்ட முடியும். பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தங்களுக்கென்று தனியாக தொழில் தொடங்கி அதை வைத்து வாழ்க்கை நடத்துவர்.

 

இதனால் நடிகர் சூரி குடும்பத்தை கவனிக்க மதுரையில் ஒரு ஹோட்டலை தொடங்கியுள்ளார். இந்த ஹோட்டலை தொடங்கி வைக்க நடிகர் சிவகார்த்திகேயனை வரவைத்து தொடங்கியுள்ளார். 'மனம் கொத்தி பறவை', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' போன்ற படங்களின் மூலம் இருவரும் நடித்து நண்பர்களாக மாறினர்.


நடிகர் சூரியின் ஹோட்டலை திறந்து வைத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்

செய்தியாளர் அலுவலக முகவரி
1B, Commercial Site, TNHB,
HUDCO Colony, Peelamedu,
Coimbatore, Tamil Nadu
India - 641004.
செய்தியாளர் கைபேசி எண்
9514514874
செய்தியாளர் அலுவலக எண்
+914224398003
செய்தியாளர் மின்னஞ்சல்
raghulmuky054@gmail.com