ads
அறம் படத்தின் முக்கிய கருத்து - சிவகார்த்திகேயன்
மோகன்ராஜ் (Author) Published Date : Nov 10, 2017 18:40 ISTபொழுதுபோக்கு
நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்துள்ள அறம் படத்தினை புதுமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கி இன்று வெளியிடப்பட்டது. மக்களின் நலன், தேவை காரணத்தினால் ஏற்படும் சிக்கல்கள் பற்றிய சமூகத்தை சார்ந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பின் கீழ் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ஒளிப்பதிவு, கிப்ரான் இசையமைப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
படத்தினை பார்த்த சிவகார்திகேயன், சினிமாவில் பலநிகழ்வுகளை பதிவு செய்து, சமூகத்தில் கவனிக்கப்படாத பிரச்சனைகள், சிக்கல்கள் போன்றவைகள் வெளிப்படுத்தியுள்ளோம். நயன்தாராவின் 'அறம்' படம் இது வரை சொல்லப்படாத பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. நாம் தினந்தோறும் பேப்பர், டிவி போன்றவற்றில் பார்த்து வரும் செய்தியை தெளிவாகவும், அழுத்தமாகவும் இப்படத்தின் மூலம் பதிவு செய்துள்ளனர்.
இதனை பார்க்கும் போது நம் நாட்டில் எவ்வளவு பெரிய பிரச்சனை இருப்பதை உணரமுடிகிறது. இந்த பிரச்சனையை ஒரு குழந்தையின் மூலம் சொல்லும் போது அதன் வலி அதிகமா இருக்கிறது என்று பேட்டியை கொடுத்ததினை தொடர்ந்து, சிவா இது போன்ற படத்தினை எடுத்த இயக்குனர் கோபி நயினார், தயாரிப்பாளர் ஜே.ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறினார்.