ads
வேலைக்காரன் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 13, 2017 19:00 ISTபொழுதுபோக்கு
சிவகார்த்திகேயன், நயன்தாரா முதல் முதலாக இணைந்து நடிக்கும் வேலைக்காரன் படத்தில் சினேகா, ஆர்ஜே. பாலாஜி, தம்பி ராமையா, ரோகினி, சதிஷ், பிரகாஷ் ராஜ் இன்னும் சிலர் விறுவிறுப்பான வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் மலையாள நடிகர் பகத் பசில் முதல் முறையாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து, படம் ரிலீசாகும் முன்பே அதிரடி ஹிட்ஸ் 'கருத்தவன் எல்லாம் கலீஜாம்', 'உயிரே+இறைவா' பாடல்கள் கொடுத்துள்ளார். இதன் காரணத்தினால் படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. நீண்ட தொடராக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தானில் ஆஷ்மீர் தர்கா பகுதியில் பாடல் காட்சிகள் கடந்த ஒரு வாரமாக எடுத்து வந்த நிலையில் தற்சமயம் படத்தின் காட்சிகள் நிறைவடைந்து விட்டதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் படத்தினை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் 'வேலைக்காரன்' படத்தில் அதிகளவு சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இவை அறம் படத்தினை காட்டிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.