சிம்பு, ஹரிஷ் கல்யாணுக்கு கொடுத்த பாடகர் வாய்ப்பு !

       பதிவு : Nov 05, 2017 15:31 IST    
சிம்பு, ஹரிஷ் கல்யாணுக்கு கொடுத்த பாடகர் வாய்ப்பு !

காமெடி நடிகர் சந்தானம் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரில் சில படங்களின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் சந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா படத்தின் அனைத்து வேலைகளும் இறுதி நிலைக்கு வந்துவிட்டதால், படத்தினை தணிக்கை குழுவிற்கு அனுப்பிவைக்க திட்டமிட்டப்பட்டு வருகின்றனர். 

இப்படத்தின் மூலம் நடிகர் சிலம்பரசன் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்நிலையில் படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. சமீபத்தில் பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண் மற்றும் சிலம்பரசன் இருவரும் சந்தித்துள்ளனர். இதன் மூலம் ஹரிஷ் பாடல் பாடுவதில் திறமையுடையதாக இருப்பது சிம்பு அறிந்திருக்கிறார்.    

 

இதன் காரணத்தினால் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் இறுதியில் சிம்பு இசையமைக்க ஹரிஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடல் ஹரிஷ் திறமையை வெளிப்படுத்த சிம்பு அளித்த ஒரு வாய்ப்பு போன்று தெரிகிறது. இந்த பாடல் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் சிடியில் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. 
 


சிம்பு, ஹரிஷ் கல்யாணுக்கு கொடுத்த பாடகர் வாய்ப்பு !


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்