ads

சாதி வெறியை ஆழமாக எடுத்துரைக்கும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியின் அடுத்த படைப்பு

நடிகர் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் அடுத்தகாக உருவாகும் படம் ஒரு நாவலை தழுவியதாக உருவாகவுள்ளது.

நடிகர் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் அடுத்தகாக உருவாகும் படம் ஒரு நாவலை தழுவியதாக உருவாகவுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வட சென்னை' படம் வரும் அக்டோபர் 17ஆம் தேதியில் வெளியாகவுள்ளது. இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். மூன்று பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் மட்டும் தான் தற்போது வெளியாகிறது. இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்புகளை பொறுத்து மூன்றாவது பாகத்தை இயக்க போவதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.

இந்த படம் வட சென்னை மக்களின் வாழ்வியலை பற்றிய உண்மை கதை. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணி புதிய படத்தில் இணைந்துள்ளதாக இயக்குனர் அமீர் 'வடசென்னை' இசை வெளியீட்டு விழாவில் வெளியிட்டார். இந்த படத்தில் அமீரும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த படம் சாகித்ய அகாடமி விருது வாங்கிய எழுத்தாளரான பூமணி என்பவர் எழுதிய நாவலை தழுவியதாக உருவாகவுள்ளது.

தற்போது தமிழகத்தில் பல காதல் ஜோடிகளின் உயிரை பிரித்து வரும் சாதிவெறியை பற்றி இவர் எழுதிய 'அஞ்ஞாடி' என்ற நாவல், தமிழ் இலக்கிய வரலாற்றிலே புதிய மைல்கல்லை தொட்டது. இந்த நாவலை படைத்த எழுத்தாளர் பூமணிக்கு கடந்த 2014இல் சாகித்திய அகாடமி விருது கிடைத்தது. தற்போது நாவலை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் புதிய படத்தினை உருவாக்க உள்ளார். சாதி வெறியை பற்றி ஆழமாக எடுத்துரைக்க உள்ள இந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளார்.

சாதி வெறியை ஆழமாக எடுத்துரைக்கும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியின் அடுத்த படைப்பு