ads

சர்கார் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கொடுத்த எச்சரிக்கை

சர்கார் படம் குறித்து பேட்டி அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

சர்கார் படம் குறித்து பேட்டி அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழா காந்தி ஜெயந்தியில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய அரசியல் வசனங்களுக்கு பொது மக்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் மத்தியில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனால் சர்கார் படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் பலமாக அதிகரித்துள்ளது.இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் வெவ்வேறு இடங்களில் நடந்துவருகிறது. விரைவில் இந்த படத்தின் டீசரை வெளியிட உள்ளதாக ஏஆர் முருகதாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சர்கார் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேண்டுகோள் வைக்கும் விதமாகவும் எச்சரிக்கை செய்யும் விதமாகவும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அவருடைய டிவிட்டரில் 'சர்கார் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு, பல பேரின் கடின முயற்சியினால் இந்த படம் உருவாகியுள்ளது. ஆனால் இந்த படத்தின் ஜூனியர் கலைஞர்கள் படம் குறித்து பேட்டி அளித்து வருகின்றனர். இது நியாயமில்லை. எங்களது அனுமதி இல்லாமல் படம் குறித்து பேட்டி அளித்து கதை பற்றி கூறினால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருவதால் செய்தியாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் படக்குழுவினரை அழைத்து படம் குறித்து பேட்டி எடுத்து வருகின்றனர். இதனால் இந்த படத்தின் கதை வெளியிடப்படுமோ என்ற அச்சத்தில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தனது சர்கார் படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்கார் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கொடுத்த எச்சரிக்கை