ads

உறுதியானது விஜய் அட்லீ கூட்டணி - விநாயகர் சதுர்த்தியில் அதிகாரபூர்வ அறிவிப்பு

மெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. இதற்கான அறிவிப்பினை விநாயகர் சதுர்த்தியில் வெளியிட உள்ளனர்.

மெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. இதற்கான அறிவிப்பினை விநாயகர் சதுர்த்தியில் வெளியிட உள்ளனர்.

நடிகர் விஜய், மெர்சல் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'சர்கார்' படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினையும் விமர்சனங்களையும் பெற்றது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படம் வரும் தீபாவளியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்திற்கு பிறகு விஜயின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. தற்போது விஜயின் 63வது படத்தை மீண்டும் அட்லீ இயக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது. ஏற்கனவே விஜயின் தெறி, மெர்சல் போன்ற படங்களை இயக்கிருந்த அட்லீ அவரது 63வது படத்தையும் இயக்க உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விநாயகர் சதுர்த்தியில் வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தில் நடிக்க தெலுங்கு நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உறுதியானது விஜய் அட்லீ கூட்டணி - விநாயகர் சதுர்த்தியில் அதிகாரபூர்வ அறிவிப்பு