ads

இந்தியில் ரீமேக் ஆகிறது இயக்குனர் எலனின் பியார் பிரேமா காதல்

இயக்குனர் எலன் இயக்கத்தில் வெளியான பியார் பிரேமா காதல் கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிற்கு செல்ல உள்ளது.

இயக்குனர் எலன் இயக்கத்தில் வெளியான பியார் பிரேமா காதல் கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிற்கு செல்ல உள்ளது.

கிரகணம் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் நாயகனாக அறிமுகமான இயக்குனர் எலன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான படம் 'பியார் பிரேமா காதல்'. நடிகர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஹரிஸ் கல்யாண் மற்றும் ரைஸா வில்சன் ஆகியோரது நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

காதல் கலந்த காமெடி படமாக வெளியான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இந்தியில் ரீமேக் ஆகும் இந்த படத்தினையும் இயக்குனர் எலன் இயக்க உள்ளார். இதற்காக இயக்குனர் எலன் கடந்த ஆண்டு வெளியான 'பூமி (BHOOMI)' படத்தின் தயாரிப்பாளரான சந்தீப் சிங்குடன் இணைந்துள்ளார். இந்த கூட்டணியில் இரண்டு படங்கள் உருவாக உள்ளது.

பியார் பிரேம காதல் படத்தின் இந்தி ரீமேக் தவிர ரொமான்டிக் காதல் கலந்த புது படத்தினையும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மூன்று மொழிகளில் உருவாக்க உள்ளனர். வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கு சினிமா துறையில் எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் எலன் இந்த படத்தின் மூலம் கோலிவுட்டில் இருந்து பாலிவுட் உலகிற்கு அடியெடுத்து வைக்கிறார்.

இந்தியில் ரீமேக் ஆகிறது இயக்குனர் எலனின் பியார் பிரேமா காதல்