ads
கின்னஸ் சாதனை இயக்குனரின் நாகேஷ் திரையரங்கம் வெளியீடு தேதி அறிவிப்பு
வேலுசாமி (Author) Published Date : Feb 01, 2018 11:46 ISTபொழுதுபோக்கு
'நெடுஞ்சாலை' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் ஆரி நடிப்பில் தற்போது 'நாகேஷ் திரையரங்கம்' படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் இசாக் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக தமிழில் 2014-இல் வெளிவந்த 'அகடம்' என்ற படத்தையும், தெலுங்கில் 2016-இல் வெளிவந்த 'சீசா' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இதில் 'அகடம்' படம் சிங்கிள் ஷாட்டில் 123 நிமிடத்தில் எடுக்கப்பட்டது. இந்த படத்தின் மொத்த ஒளிபரப்பு நேரம் இரண்டு மணிநேரமாகும். இந்த படம் கின்னஸ் புத்தகத்தில் (Guinness Book Of World Records as the longest uncut film) இடம் பிடித்துள்ளது. இவருடைய இயக்கத்தில் காமெடி பேய் படமாக 'நாகேஷ் திரையரங்கம்' உருவாகியுள்ளது.
இந்த படத்தில் ஆரி, ஆஷ்னா சவேரி, மனோபாலா, காளி வெங்கட், லொள்ளு சபா சுவாமிநாதன், முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் முன்னணி நடிகைகளான லதா மற்றும் சாவித்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை டிரான்சிண்டிய மீடியா மற்றும் என்டேர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடேட் சார்பில் ராஜேந்திரன் எம் ராஜன், புனிதா ராஜன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். காமெடி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஆரி, நிலத்தரகராக நாகேஷ் கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.
இவருக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி புத்தக விற்பனையாளராக நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆரியின் பிறந்த நாளில் இயக்குனர்கள் அமீர் மற்றும் கரு பழனியன்ப்பன் ஆகியோர் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த படத்தின் டீசரை கடந்த ஆண்டு மார்ச் 30 இல் வெளியிட்டார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (02-01-2018) நடைபெற உள்ளது.