ads

சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் இணைந்துள்ள தெறி வில்லன்

பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மகேந்திரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மகேந்திரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலா, 2.0 படங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு லக்னோவை தொடர்ந்து தற்போது வாரணாசியில் படமாக்கப்பட்டு வருகிறது. வாரணாசியில் நடைபெறும் படப்பிடிப்பில் ரஜினி மற்றும் த்ரிஷாவின் காதல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பில் தற்போது நடிகர் மற்றும் இயக்குனருமான சசிகுமார் இணைந்துள்ளார்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை சமீபத்தில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் த்ரிஷாவுக்கு அண்ணனாகவும், ரஜினிக்கு நண்பனாகவும் சசிகுமார் நடிக்க உள்ளார். இவருக்கு பிறகு தற்போது நடிகர் மற்றும் இயக்குனருமான மகேந்திரன் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் இணைந்துள்ள தெறி வில்லன்

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் மற்றும் இயக்குனரான இவர் ரஜினியை வைத்து முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இது தவிர ரஜினி மற்றும் கமலின் ஏராளமான படங்களுக்கு கதாசிரியராகவும், வசன எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். ரஜினிக்கு மிகவும் பிடித்த இயக்குனரான இவர் 'பேட்ட' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளது நடிகர் ரஜினிக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் இணைந்துள்ள தெறி வில்லன்