ads

இயக்குனர் மணிரத்னமின் செக்க சிவந்த வானம் திரைவிமர்சனம்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் செக்க சிவந்த வானம் படம் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் செக்க சிவந்த வானம் படம் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிடை' படத்திற்கு பிறகு இன்று வெளியாகியுள்ள படம் 'செக்க சிவந்த வானம்'. ஒரு முன்னணி நடிகரின் படத்திற்கே ரசிகர்களின் அலப்பறைகள் தாங்க முடியாத சூழலில் நான்கு முன்னணி நடிகர்களை வைத்து ஒரு கேங்க்ஸ்டர் படத்தை இயக்குனர் மணிரத்னம் உருவாக்கியுள்ளார். இன்று உலகமுழுவதும் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தில் சென்னையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் தாதாவாக வளம் வருகிறார் பிரகாஷ் ராஜ்.

இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் அரவிந் சாமி பிரகாஷ் ராஜுடன் இருந்து அவர் கொடுக்கும் வேலைகளை செய்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களான அருண் விஜயும், சிம்புவும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பிரகாஷ் ராஜ் காரில் சென்று கொண்டிருக்கும் போது வெடிகுண்டு விபத்தில் சிக்குகிறார். இந்த விபத்தில் இருந்து தப்பித்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். உயிருக்கு போராடி வரும் பிரகாஷ் ராஜை காண்பதற்காக அவருடைய மகன்களான அருண் விஜயும், சிம்புவும் சென்னை வருகின்றனர்.

சிகிச்சைக்கு பிறகு பிரகாஷ் ராஜ் நெஞ்சுவலியால் இறந்து விடுகிறார். இவர் மறைந்த பிறகு இவருடைய யார் நிரப்புவது என்ற போட்டியால் மூன்று மகன்களும் ஒருவரையொருவர் மோதி கொள்கின்றனர். இந்த மோதலில் அரவிந் சாமியின் நண்பனாக விஜய் சேதுபதியும் நுழைகிறார். இறுதியில் பிரகாஷ் ராஜ் இடத்தை நிரப்ப நடந்த மோதலில் வெற்றியை கண்டது யார் என்பதே படத்தின் கதை. இந்த படத்தில் முன்னணி நடிகரான பிரகாஷ் ராஜ் தனது கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்து முடித்துள்ளார்.

மற்ற முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, அரவிந் சாமி, அருண் விஜய், சிம்பு ஆகியோரும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை கவர்கின்றன. இந்த படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவிற்கு ரீஎண்ட்ரியாகவே உள்ளது. அருண் விஜய் தன்னுடைய இளமை துள்ளலுடன் சிறப்பாக நடித்துள்ளார். அரவிந் சாமியின் நண்பராகவும், போலீஸாகவும் வலம் வரும் விஜய் சேதுபதி ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியுள்ளார்.

இந்த படத்தில் அரவிந் சாமியின் மனைவி ஜோதிகா, அருண் விஜய் மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்புவின் காதலி டயானா மற்றும் ரிப்போர்ட்டராக அதிதி ராவ் என அனைவருமே தங்களுடைய கதாபாத்திரத்தை பூர்த்தி செய்துள்ளனர். இந்த படம் வழக்கமான கதையை கொண்ட கேங்ஸ்டர் படம் என்றாலும் முன்னணி நடிகர்களை வைத்து மிரட்டலான கேங்ஸ்டர் படமாக மணிரத்னம் உருவாக்கியுள்ளார். ஏற்கனவே இசைப்புயலின் இசையில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் வீடியோ காட்சி மூலம் பார்க்கும் போது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. 

இயக்குனர் மணிரத்னமின் செக்க சிவந்த வானம் திரைவிமர்சனம்